கட்டுமான பொருட்களின் விலை 30% அதிகரிப்பு - கட்டுமானத்துறையினர் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

கட்டுமான பொருட்களின் 30 சதவீத திடீர் விலை உயர்வால் கட்டுமான தொழிலாளர்கள் முதல் வியாபாரிகள் வரை அனைவரும் பாதிக்‍கப்பட்டுள்ளனர். விளம்பர திமுக அரசு உடனடியாக தலையிட்டு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றாம் தேதி முதல் கட்டுமான பொருட்களின் விலை திடீரென 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதுவரை ஒரு டன் முன்பு 600 ரூபாயாக இருந்த எம் சேண்ட் விலை தற்போது 900 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. 10 டயர் கொண்ட டிப்பர் லாரிக்கான 18 டன் லோடு முன்பு 10 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தற்போது 5 ஆயிரத்து 400 ரூபாய் விலை உயர்ந்து 16 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

இதே போன்று முன்பு 600 ரூபாயாக இருந்த ஒரு டன் ஜல்லி, தற்போது 900 ரூபாயாக விற்பனையாகிறது. முன்பு டிப்பர் லாரி லோடு ஒன்றுக்‍கு 10 ஆயிரத்து 800 ரூபாயாக விற்பனை ஆனது. தற்போது 5 ஆயிரத்து 400 ரூபாய் அதிகரித்து 16 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

பூச்சி வேலை மண் எனப்படும் p sand முன்பு ஒரு டன் 450 ரூபாயாக இருந்தது. தற்போது ஆயிரத்து 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. முன்பு 16 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டிப்பர் லாரி p sand லோடு, தற்போது ஆயிரத்து 300 ரூபாய் விலை உயர்ந்து 22 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

முன்பு 400 ரூபாய் ஆக இருந்த wet mix, ஒரு டன் தற்போது 600 ரூபாயாக அதிகரித்துள்ளது. 
முன்பு 7 ஆயிரத்து 200  ரூபாயாக இருந்த ஒரு டிப்பர் லாரி wet mix லோடு தற்போது 3 ஆயிரத்து 600 ரூபாய் விலை உயர்ந்து 10 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

முன்பு ஒரு டன் 150 ரூபாயாக இருந்த மலை மண், தற்போது 250 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. 
முன்பு 2 ஆயிரத்து 700 ரூபாய்க்‍கு விற்பனையான ஒரு டிப்பர் லாரி மலை மண் லோடு ஆயிரத்து 
800 ரூபாய் விலை உயர்ந்து தற்போது 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய விளம்பர திமுக அரசு, விலையேற்றத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கட்டுமானப்பொருட்களின் விலை திடீரென 30 சதவீதம் வரை உயர்ந்ததால் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான வர்த்தகம் மற்றும்  கட்டுமான பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,  தெரிவித்தனர்.

Night
Day